காலீஷ் இயக்கத்தில் எஸ். மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் ஜீவா, நிக்கி கல்ராணி, கோவிந்த் பத்ம சூர்யா, அனைகா சோடி, ஆர். ஜே பாலாஜி, ராஜேந்திர பிரசாத் மற்றும் பலர் நடிப்பில் பல தடைகளை தாண்டி வெளியாகி உள்ள படம் கி.
Kee Movie Review
படத்தின் கதைக்களம் :
கல்லூரில் படிக்கும் ஜீவாவும், ஆர்.ஜே பாலாஜியும் படிப்பில் மக்காக இருந்து தேர்வுகளில் கோட்டை விட்டு கொன்றிருந்தாலும் ஹேக்கிங்கில் அதிக ஆர்வம் கொண்டுள்ளனர்.
தேர்வுக்கு முன்பே கல்லூரியில் இருந்து வினாத்தாள்களை திருடுவது, மொபைல் போன்களை ஹேக் செய்வது போன்று சில விசயங்களை செய்து வருகின்றனர்.
இவரை போலவே கோவிந்த் பத்ம சூரியா ஹேக்கிங் மூலமாக பெண்களை மிரட்டி பணம் பறித்தல், தற்கொலைக்கு தூண்டி அவர்களை கொல்லுவது போன்ற மோசமாக செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த கும்பலை ஜீவா எப்படி ஒழிக்கிறார்? தன்னுடைய காதலி நிக்கி கல்ராணியுடன் சேர்ந்தாரா? இல்லையா? என்பது தான் இப்படத்தின் மீதி கதையும் களமும்.
இயக்குனர் சார் எல்லாம் சரி தான், ஆனால்? – 100 படத்தின் விமர்சனம்.!
படத்தை பற்றிய அலசல் :
ஜீவா, நிக்கி கல்ராணி, ராஜேந்திர பிரசாத் ஆகியோரின் நடிப்பு சிறப்பாக அமைந்துள்ளது. வில்லனாக நடித்துள்ள கோவிந்த் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் ஹேக்கில் அவர் சாதாரணமாக கஷ்டமான செயல்களை செய்து முடித்து விடுவது எல்லாம் ஓவராக இருக்கிறது.
இயக்குனர் கதை சரியாக அமைத்திருந்தாலும் கதாபாத்திரங்கள் எதுவும் அழுத்தமாக இல்லாதது பெரிய மைனஸ் தான். இதனால் ஜீவா இந்த படத்தை தேர்வு செய்ய இன்னும் கொஞ்சம் யோசித்திருக்கலாம்.
தொழில்நுட்பம் :
இசை :
விஷால் சந்திர சேகரின் பின்னணி இசை சிறப்பாக அமைந்துள்ளது. ஆனால் பாடல்கள் பெரிய அளவில் கவரவில்லை.
ஒளிப்பதிவு :
அபிநந்தன் ராமானுஜத்தின் ஒளிப்பதிவும் அருமை.
தம்ப்ஸ் அப் :
1. படத்தின் கதை
2. ஜீவாவின் நடிப்பு
தம்ப்ஸ் டவுன் :
1. படத்தின் திரைக்கதை
2. அழுத்தமில்லாத கதாபாத்திரங்கள்
3. வில்லன் செய்யும் ஹேக்கிங் எல்லாம் நம்ப முடியாத அளவில் இருப்பது ( படம் தான் என்றாலும் ஒரு நியாயம் வேணாவா? )