Kaviya in Pandian Stores Mullai Gettup

அச்சு அசலாக அப்படியே முல்லையாகவே மாறியுள்ளார் காவியா.

Kaviya in Pandian Stores Mullai Gettup : தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக பயணத்தைத் தொடங்கி சீரியல் நடிகையாக வளர்ந்தவர் சித்ரா.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

இப்படியான நிலையில் கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை மற்றும் மன அழுத்தம் காரணமாக இரு வாரங்களுக்கு முன்னர் ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் காவியா நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியானது. அதாவது காவியா என்பவர் பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவுமணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான்.

தற்போது இவர் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ஷூட்டிங் கலந்து கொண்டுள்ளார். முழுக்க முழுக்க முல்லையாக மாறிய இவரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.