பரத்தின் படத்தில் விஜய் டிவி நடிகை வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுக்க உள்ளார்.

Kaviya in Bharath Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பரத். இவர் அடுத்ததாக நடிக்க உள்ள புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்க உள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்க உள்ளது. தற்போது இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார் விஜய் டிவி சீரியல் நடிகை.

அவர் வேறு யாரும் இல்லை. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவ்யா அறிவுமணி தான். இவர் வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுக்க இருப்பதால் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.