Kavin Reaction To Rendu Kadhal Song

ரெண்டு காதல் படத்திலிருந்து வெளியான லவ் ஃபெயிலியர் பாடலுக்கு கவின் தன்னுடைய ரியாக்ஷனை பதிவு செய்துள்ளார்.

Kavin Reaction To Rendu Kadhal Song : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வெற்றிகரமாக முடிவடைந்து விட்டது.

மூன்றாவது சீசனில் 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர்கள் கவின், லாஸ்லியா ஆகியோர். இவர்கள் இருவரும் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது காதல் வலையில் விழுந்தனர்.

ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு இவர்களின் காதல் தொடர்ந்ததாக தெரியவில்லை. இருவரும் பிரிந்து விட்டதாக பலரும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிப்பில் உருவாகும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் இடம் பெற்றுள்ள லவ் பெயிலியர் பாடலுக்கு ரியாக்ஷனை பதிவு செய்துள்ளார்.

“அழகாய் மலர்வது போல் உதிர்வது காதல்..
எங்கோ தெரிவது போல் மறைவது காதல்..”

விக்னேஷ் சிவன் Genius sir neenga.. ❤️
அனிருத் Thank you thala for this.. ❤️🙏🏼

RenduKaadhal என தெரிவித்துள்ளார்.