Kavin New Movie Heroine
கவினுக்கு ஜோடியாக பிகில் பட நடிகை நடித்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

Kavin New Movie Heroine : தமிழ் சினிமாவில் நடிகராகவும் தொகுப்பாளராகவும் சின்னத்திரை நடிகராகவும் வலம் வருபவர் கவின்.

ஏற்கனவே இவருக்கு ரசிகர்கள் இருந்து வந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியால் அந்த கூட்டம் இன்னும் பல மடங்கானது.

நான் தற்கொலை முயற்சி செய்யல.. பிக் பாஸில் நடந்ததை மேடையில் புட்டு புட்டு வைத்த மதுமிதா – என்ன சொல்றாரு பாருங்க

பிக் பாஸுக்கு பிறகு கவின் புது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அறிமுக இயக்குனர் வினீத் என்பவர் இயக்கி தயாரித்துள்ள ஒரு படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷ்ன் வேலைகள் நடந்து வருகின்றன.

இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக பிகில் படத்தில் நடித்திருந்த அம்ரிதா நாயகியாக நடித்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்த படம் பற்றிய அடுத்தடுத்த அப்டேட்களும் விரைவில் வெளியாகும் என்பதால் ரசிகர்கள் தெறிக்க விட்டு கொண்டாட தயாராகி வருகின்றனர்.

என்ன கவின் ரசிகர்களே ஆட்டத்துக்கு தயாரா?