Kavin Losliya
கவின் செயலால் லாஸ்லியாவுடன் காதல் இல்லையோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மனதில் ஆழமாக தடம் பதித்து விட்டனர் கவின், லாஸ்லியா.

பிக் பாஸ் வீட்டிற்குள் மலர்ந்த இவர்களின் காதல் 100 நாள் முடிவிற்கு பின்னர் என்னவானது என்றே தெரியவில்லை. ஒருவரை ஒருவர் சந்தித்து கொள்வதும் இல்லை, பேசி கொள்வதும் இல்லை.

அவ்வளவு ஏன் நிகழ்ச்சியில் ஏதாவது கலந்து கொண்டால் கூட இருவரும் பார்த்து சிரித்து கொள்வது கூட இல்லை. இதையெல்லாம் லாஸ்லியாவின் அப்பா வைத்துள்ள காதல் டெஸ்டில் பாஸ் செய்ய தான் என்று கூட பேசப்பட்டு வந்தன.

இந்நிலையில் கடந்த 2019-ல் தொலைக்காட்சி மூலமாக அதிகம் பிரபலமானவர்கள் பட்டியலில் ஆண்களில் கவினும் பெண்களில் லாஸ்லியாவும் முதலிடம் பிடித்திருந்தனர்.

இது குறித்து கவின் பத்திரிகை ஒன்றிற்கு கொடுத்த பேட்டியில் லாஸ்லியாவை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவர் சக போட்டியாளராக கூட கூறவில்லை என்பதால் நெட்டிசன்கள் இவர்களுக்குள் காதல் இருக்கா? இல்லையா? என்ற கேள்வியை முன்வைக்க தொடங்கியுள்ளனர்.

கவின் ஆர்மியினர் நிச்சயம் அவர்களுக்குள் காதல் இருக்கிறது, சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக தற்போது அமைதியாக இருந்து வருகின்றனர் என்கின்றனர்.