kavin losliya

ஒரு நிகழ்ச்சியில் கவினும், லாஸ்லியாவும் மீண்டும் ஒன்றாக கலந்து கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரிலும் அதிகம் கவனிக்கப்பட்டர்கள் கவினும், லாஸ்லியாவும். பிக்பாஸ் வீட்டில் காதல் ஜோடியாக வலம் வந்த அவர்களாலேயே நிகழ்ச்சி பரபரப்பாக சென்றது.

தற்போது பிக்பாஸ் கொண்டாட்டம் என்கிற தலைப்பில் விஜய் தொலைக்காட்சியில் விரைவில் ஒரு நிகழ்ச்சி வெளியாகவுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்றது. அதில், கவினும், லாஸ்லியாவும் ஒன்றாக கலந்து கொண்டனர். மேலும், விஸ்வாசம் அஜித் போலவும், சர்கார் விஜய் போலவும் கெட்டப்புகளில் கவின் வலம் வந்தார். இது தொடர்பான புகைப்படங்களையும் கவினின் ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.