Kavin Losliya in Bigg Boss Party

பிக்பாஸ் பார்ட்டியில் லாஸ்லியாவும், கவினும், கலந்து கொண்டுள்ள புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.

Kavin Losliya in Bigg Boss Party : தமிழ் சின்னத்திரையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் முடிவடைந்த நிலையில் ஆரி டைட்டில் வின்னர் ஆனார்.

மேலும் பாலாஜி முருகதாஸ் ரன்னர் ஆனார். இதனை கொண்டாடும் விதமாக பிக்பாஸ் போட்டியாளர்கள் பார்ட்டி வைத்து கொண்டாடினர். இதில் திரையுலக நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர்.

பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளர்கள் ஆன லாஸ்லியா, கவின் இருவரும் பிக்பாஸ் பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் இருவரும் தனித்தனியாக ஆஜித்துடன் இணைந்து புகைப்படம் எடுத்து கொண்டுள்ளனர்.

இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.