Kavin
ட்விட்டர் ட்ரெண்ட் செய்து கவின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதற்கான காரணம் என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளர், நடிகராக வலம் வந்து வெள்ளித்திரையில் நட்புன்னா என்னனு தெரியுமா படத்தின் மூலமாக நாயகனானவர் கவின்.அதன் பின்னர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக மொத்த ரசிகர்களின் மனதையும் கவர்ந்தார்.

இதன் மூலம் தொலைக்காட்சி மூலமாக கடந்த வருடம் அதிகம் பிரபலமான மனிதராக கவின் முதலிடத்தை பிடித்திருப்பதாக பிரபல பத்திரிகை ஒன்று அறிவித்துள்ளது.

கவினை பற்றி சாதாரண விசியங்களையே மாஸாக கொண்டாடும் கவின் ரசிகர்கள் இதை கொண்டாடாமல் இருப்பார்களா என்ன?