Kavin
கவின் நடிக்கும் இரண்டாவது படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Kavin 02 Movie FL Announcement : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் மூலமாக புகழின் உச்சத்தை அடைந்தவர் கவின்.

இவர் வெள்ளித்திரையில் நட்புன்னா என்னனு தெரியுமா என்ற படத்தின் மூலமாக அறிமுகமாகி இருந்தார். இந்த படத்தை தொடர்ந்து தற்போது வினீத் என்பவரின் இயக்கம் மற்றும் தயாரிப்பில் லிப்ட் என்ற படத்தில் நடித்துள்ளார்.

கவினுக்கு ஜோடியாக அமிர்தா அய்யர் நடித்துள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் இப்படத்தின் பேன் மேட் போஸ்டர்களை ரசிகர்கள் ஷேர் செய்து தற்போதில் இருந்தே கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.