சூரரைப் போற்று படத்தின் காட்டு பயலே பாடல் புதிய சாதனையை படைத்துள்ளதாக சோனி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Kattu Payale Song Record in YouTube : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பு சூரரைப் போற்று என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.
இறுதிச்சுற்று படத்தின் இயக்குனரான சுதா கொங்கரா இயக்க ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்தில் இருந்து ஒரு பாடல் வெளியாகியிருந்த நிலையில் சூர்யாவின் பிறந்தநாள் விருந்தாக காட்டுப் பயலே என்ற பாடல் வெளியானது.
ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றிருந்த இப்பாடல் தற்போது யூடியூபில் 6 மில்லியன் பார்வையாளர்களை பெற்று புதிய சாதனையைப் படைத்துள்ளது.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சோனி மியூசிக் நிறுவனம் வெளியிட சூர்யா ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
சூரரைப் போற்று படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.