விஜய் டிவி சீரியல் ஒன்று முடிவுக்கு வர இருப்பதாக வெளியான தகவலால் ரசிகர்கள் பெருமூச்சு விட்டு வருகின்றனர்.
Katrin Mozhi Serial Update : தமிழ் சின்னத்திரையில் சீரியல்களுக்கு பெயர் போன டிவி சேனல் சன் டிவி. ஆனால் தற்போது இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களும் மொக்கையாக தொடங்கி விட்டன.
அதே போல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. ஆனால் ஏன்டா ஓடுதுனு தெரியாமல் ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் காற்றின் மொழி.
ராஜா ராணி சஞ்சீவ் நடிப்பதால் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் தான் அந்த சீரியல் எந்தவித விறுவிறுப்பும் சுவாரஸ்யமும் இல்லாமல் இருந்து வருகிறது. இதனால் இந்த சீரியலை முடித்து வைக்க விஜய் டிவி முடிவு செய்துள்ளதாம்.
இதனால் ரசிகர்கள் பெருமூச்சு விட்டு வருகின்றனர்.