Kaththi Movie Box Office Collection
Kaththi Movie Box Office Collection

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான கத்தி திரைப்படம் எவ்வளவு வசூல் கொடுத்துள்ளது. இந்தப் படத்தால் தயாரிப்பாளருக்கு எவ்வளவு நஷ்டம் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

Kaththi Movie Box Office Collection : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது மாஸ்டர் என்ற திரைப்படம் உருவாகி ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இந்தப் படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 65 என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.

ஏற்கனவே முருகதாஸ் இயக்கத்தில் விஜய் துப்பாக்கி, கத்தி மற்றும் சர்க்கார் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

விவசாய பிரச்சனையை கையில் எடுத்துப் பேசிய கத்தி திரைப்படம் நல்ல கொடுத்திருந்தாலும் தயாரிப்பாளருக்கு குறைந்த லாபத்தையே கொடுத்துள்ளது.

பட்ஜெட் 14 கோடி, வசூலும் லாபமும் எவ்வளவு தெரியுமா? – மிரள வைக்கும் படையப்பா படத்தின் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்.!

ஆம், இப்படம் ரூபாய் 95 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. உலகம் முழுவதும் ரூபாய் 114 கோடி வசூல் செய்துள்ளது.

தமிழகத்தில் மட்டும் ரூபாய் 89.5 கோடி வசூலித்துள்ளது. கேரளாவில் 8.65 கோடியும் கர்நாடகாவில் 9 கோடியும் வட இந்தியாவில் 1.4 கோடி ரூபாயும் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 0.65 கோடி ரூபாயும் ஓவர்சீஸ் நாடுகளில் ரூபாய் 35 கோடியும் வசூல் செய்துள்ளது.

இப்படத்தின் உலகம் முழுவதுமான சாட்டிலைட் ரைட்ஸ் ரூபாய் 62 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. படத்தின் ஷேர் ரூபாய் 63 கோடியாக கிடைத்துள்ளது.

படத்தை வாங்கி விநியோகித்தவர்களுக்கு ரூபாய் ஒரு கோடி வரை ஷேர் கிடைத்துள்ளது.

ஆனால் படத்தை தயாரித்த தயாரிப்பாளருக்கு ரூபாய் 6 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் துப்பாக்கி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படமாகவே இடம்பெற்றுள்ளது.