Kathir's Father Act in Small Role in Master
Kathir's Father Act in Small Role in Master

பிகில் படத்தில் நடித்த கதிர் மாஸ்டர் படம் பற்றி ஒரு அப்டேட்டை கொடுத்துள்ளார்.

Kathir‘s Father Act in Small Role in Master : தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் இளம் நடிகராக வலம் வருபவர் கதிர். இவரது நடிப்பில் வெளியான பரியேறும் பெருமாள் என்ற திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் கதிர் தளபதி விஜயுடன் இணைந்து பிகில் படத்தில் மிக முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார்.

கதிர் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய அம்மா, அப்பாவின் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அவருடைய அப்பாவின் பிறந்தநாள் என்பதால் அவர்களின் புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளார்.

53 வயதாகும் தன்னுடைய அப்பா தளபதி விஜயுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் மிக மிக சிறிய வேடத்தில் நடித்திருப்பதாக கூறியுள்ளார்.

பூஜை அறையில் போட்டோ.. கடவுளாக மாறிய ஜூலி, இவருக்கு இப்படி ஒரு வெறித்தனமான ரசிகரா? – இந்த கூத்த நீங்களே பாருங்க!

கதிர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கதிர் அச்சு அசலாக அப்படியே அவரது அம்மாவைப் போலவே இருப்பதாக கமெண்ட்டுகளை கூறி வருகின்றனர்.

https://www.instagram.com/p/CCLWbNWMEdH/?igshid=1xedbqfaaxdm5

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க அனிருத் இசையமைத்துள்ளார். லாக் டவுன் காரணமாக ரிலீஸ் செய்ய முடியாமல் தள்ளிப் போய் வரும் இப்படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.