Kasturi Vs Vanitha Arguments in Twitter
Kasturi Vs Vanitha Arguments in Twitter

பீட்டர் பால் மனைவிக்கு உதவ போவதாகக் கூறிய கஸ்தூரியை தரக்குறைவாக பேசியுள்ளார் வனிதா விஜயகுமார்.

Kasturi Vs Vanitha Arguments in Twitter : பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மூத்த மகளான இவர் கடந்த ஜூலை 27-ஆம் தேதி பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.

இவர்களது திருமணம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. பீட்டர் பால் தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

அவரின் முதல் மனைவி எலிசபெத் தனக்கு நீதி வேண்டி போலீசில் புகார் அளித்தும் தொடர்ந்து பல்வேறு பேட்டிகளை கொடுத்தும் வருகிறார். அவருக்கு சூர்யா தேவி, ரவிச்சந்திரன் ஆகியோர் ஆதரவாக இருந்து வருகின்றனர்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்க்கும் சங்கீதாவுக்கும் நடந்த ரிசப்ஷன்.. ஷாலினி கொடுத்த ரியாக்ஷன் – இணையத்தில் வைரலாகும் அரிய புகைப்படங்கள்!

இவர்களை தொடர்ந்து தற்போது கஸ்தூரி அவருக்கு ஆதரவாக இருப்பதாக கூறியுள்ளார். இதனையடுத்து வனிதா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கஸ்தூரியை தரக்குறைவாக பேசி பதிவிட்டு வருகிறார்.

கஸ்தூரி எலிசபெத்துக்கு வாழ்க்கைத் தராங்களாம்.. உனக்கே வாழ்க்கை இல்ல நீ அவங்களுக்கு சப்போர்ட் பண்ற என விமர்சித்துள்ளார்.

அதற்கு கஸ்தூரி எனக்கு வாழ்க்கை இல்லை என்று சொல்லாத.‌ நான் ஒன்னும் வாழ்க்கையே யூடியூப்ல விக்கல.. அடுத்தவரோட புருஷன திருடல. 40 வயசுல குழந்தைகளை வச்சுட்டு கல்யாணம் பண்ணல என கூறியுள்ளார்.

கஸ்தூரியின் இந்த பதிவை பார்த்த வனிதா நீயே ஒரு பிராடு. லீகளா கிழிப்ப. உன்ன பத்தி எனக்கு தெரியும். லீகளா புருஷன அவங்க கூட சேர்த்து வைக்கப் போறியா? முதல்ல உன் புருஷனை உன்னோட சேர சொல்லு என்று கூறியுள்ளார்.

வனிதாவின் இப்படியான பதிவுகள் ரசிகர்களிடையே பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. சிலர் கஸ்தூரிக்கு ஆதரவாகவும் பதிவிட்டு வருகின்றனர்.

https://twitter.com/prakashjgovin/status/1284943330334261248?s=19
https://twitter.com/krishmahh/status/1284918896772829186?s=19