மிச்சர் பார்ட்டிகளையும் கம்பெனி ஆர்டிஸ்ட்களையும் பாதுகாத்து முத்தங்களுக்கு கல்தா கொடுக்கறதுக்கு பேரு என்ன தெரியுமா என பிக் பாஸ் நிகழ்ச்சியை விளாசி எடுத்துள்ளார் நடிகை கஸ்தூரி.

Kasthuri Blast Vijay Tv : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

பிக்பஸ் நிகழ்ச்சியில் விஜய் டிவி பிரபலங்களான ரியோ நிஷா மற்றும் தொகுப்பாளினி அர்ச்சனா ஆகியோர் சோம் ரமேஷ் உள்ளிட்டோர் உடன் இணைந்து குரூப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்த வாரம் இந்த குரூப்பில் இருந்து ஒருவர் அதாவது நாமினேஷனுக்கு வந்த நிஷாவை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக சனம் ஷெட்டி குறைந்து ஓட்டுகள் பெற்று இருப்பதாக கூறி வெளியேற்றப்பட்டார். இது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என விஜய் டிவிக்கு எதிராக சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தங்களது சேனலின் பணியாளர்களான ரியோ, நிஷா ஆகியோரின் கேங்கிற்கு அதிக சுதந்திரம் கொடுப்பதாகவும் அவர்களை பாதுகாத்து வருகிறார் வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த நிலையில் நடிகை கஸ்தூரி சனம் ஷெட்டி வெளியேறியதை கண்டித்து பதிவிட்டுள்ளார்.

அதாவது அவரது பதிவில், நியாயமான நேர்மையான முறையில் மக்கள் வாக்குகளை மட்டுமே நம்பி விளையாடப்படும் ஒரு Game என்று இன்னும் நம்புபவர்கள் மேடைக்கு வரவும்.

மிக்ஸ்ச்சர் பார்ட்டிகளையும் கம்பெனி ஆர்டிஸ்ட்ங்களையும் பாதுகாத்து மத்தவங்களுக்கு கல்தா குடுக்கறதுக்கு பேரு என்ன தெரியுமா ? என குறிப்பிட்டுள்ளார்.

நடிகை கஸ்தூரியின் இந்த பதிவிற்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு குவிந்து வருகிறது.