Kasthuri About Suchithra Entry

பிக் பாஸ் சீசன் நான்கின் மீராமிதுன் இவர்தான் என கஸ்தூரி ட்விட்டர் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Kasthuri About Suchithra Entry in BB : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் முதல் மூன்று சீசன்கள் முடிந்து தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

மொத்தம் 17 போட்டியாளர்கள் பங்கேற்க நடிகை ரேகா முதல் வாரத்தில் வெளியேற்றப்பட்டார். இதனை அடுத்து இரண்டாவது வாரத்தில் எவிக்ஷன் இல்லை என கூறப்பட்டு வருகிறது.

மேலும் பின்னர் போட்டியாளராக பாடகி சுசித்ரா பிக் பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. காரணம் சுசித்ரா பெயரில் வெளிவந்த சுசிலீக்ஸ் புகைப்படங்கள் திரை உலகையே ஆட்டிப் படைத்தது தான்.

இந்த நிலையில் தற்போது சுசித்ரா பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுப்பது குறித்து நடிகை கஸ்தூரி பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் ஒரு கேமரா கன்டன்ட்க்கே ஊரே அலரி போச்சு.. இப்போ 100 கேமரா. போட்டியாளர்கள் கண்டிப்பா சோசியல் டிஸ்டண்ட் பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் இவர் தான் பிக் பாஸ் சீசன் நான்கின் மீரா மிதுன் எனவும் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

அதேபோல் சுசித்ராவின் பிக் பாஸ் என்றி வரும் புதன் அல்லது வியாழக்கிழமைகளில் இருக்கும் எனவும் நெருங்கிய வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.