Kasthuri About Rajinikanth Decision on Political Entry

எதிர்பார்த்தது தான் ஆனாலும் ஏமாற்றம் எனவும் உயிருக்கு பயந்தவர்கள் போருக்கு வரக்கூடாது எனவும் சூப்பர் ஸ்டாரின் முடிவு குறித்து பேசியுள்ளார் நடிகை கஸ்தூரி.

Kasthuri About Rajinikanth Decision on Political Entry : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் அரசியலுக்கு நிச்சயம் வருவேன் தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவேன் என தெரிவித்திருந்தார்.

அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது அந்த படப்பிடிப்பில் இருந்தவர்களில் 4 பேருக்கு கொரானா வைரஸ் தொற்று இருந்ததால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதனையடுத்து ரஜினிகாந்தின் ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டதால் அவர் ஐதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று சென்னை திரும்பினார்.

சென்னை திரும்பிய வேகத்தில் அவர் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் தன்னுடைய உடல்நிலை மற்றும் தன்னை சுற்றியுள்ளவர்களின் நலனை கருத்தில் கொண்டு தான் அரசியலுக்கு வரவில்லை என்ற முடிவிற்கு வந்து இருப்பதாக தெரிவித்தார்.

தான் அரசியலில் ஈடுபடுவேன் என எதிர்பார்த்த ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் அவர் அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தார். ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடவில்லை என அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திரையுலகப் பிரபலங்களின் ரஜினியின் இந்த முடிவு குறித்து அவர்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகை கஸ்தூரியும் ட்விட்டர் பக்கத்தில் அவருடைய கருத்தை பதிவு செய்துள்ளார்.

எதிர்பார்த்தது தான். எத்தனையோ முறை நான் உட்பட பலரும் சொன்னது தான். எப்பவோ சொல்லியிருந்தால் ஏராளமானவர்களுக்கு வலியை தவிர்த்திருக்கலாம். வருடங்களை மிச்சப்படுத்தியிருக்கலாம்.

இப்பவாச்சும் சொன்னாரே. இப்ப இல்லை, எப்பவுமே இல்லை ! கோடி பண நஷ்டத்தை விட கோடி மனக்கஷ்டம் பெரிது. உயிருக்கும் தோல்விக்கும் பயந்தவர்கள் போருக்கு வரக்கூடாது. ரஜினி அவர்களின் முடிவுக்கு பாராட்டுக்கள். நீங்கள் பூரண நலத்துடன் நிம்மதியாக நீடூழி வாழ வேண்டும் என தெரிவித்துள்ளார்.