Karunas Blast Simbu

சிம்புவுக்கு கொரானா வந்திருந்தா இப்படி கேட்டிருக்க மாட்டார் என பிரபல நடிகர் அவரை விளாசித் தள்ளியுள்ளார்.

Karunas Blast Simbu : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களாக வலம் வருபவர்கள் தளபதி விஜய் மற்றும் சிம்பு. விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படமும் சிம்புவின் நடிப்பில் உருவாகியுள்ள ஈஸ்வரன் திரைப்படமும் பொங்கல் விருந்தாக ஜனவரி 13 மற்றும் 14 ஆம் தேதி வெளியாக உள்ளது.

திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே அனுமதி அளித்திருந்த நிலையில் தளபதி விஜய் முதல்வரை நேரில் சந்தித்து 100 சதவீத இருக்கைக்கு அனுமதி கேட்டார். அதேபோல் நடிகர் சிம்புவும் தமிழக முதல்வருக்கு அறிக்கை ஒன்றின் மூலமாக கோரிக்கை வைத்திருந்தார்.

இதனை ஏற்று தமிழக அரசு 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் 50 சதவீத இருக்கைக்கான அனுமதியே போதுமானது என பலரும் கூறி வருகின்றனர்.

அரவிந்த்சாமி உள்ளிட்ட சில நடிகர்கள் கூட 50 சதவீத இருக்கைக்கான அனுமதி போதுமென குரல் கொடுத்திருந்தனர்.

இந்த நிலையில் எம் எல் ஏ- வும் நடிகருமான கருணாஸ் சிம்புவுக்கு கொரானா வந்து இருந்தால் அதன் பாதிப்பு தெரியும். அப்போது சிம்பு 100 சதவீத இருக்கைக்கு அனுமதி கேட்டு இருக்க மாட்டார் என விமர்சனம் செய்துள்ளார்.

இதனால் சிம்பு ரசிகர்கள் கருணாசை தாக்கி பேசி வருகின்றனர்.