Karthik Subbaraj

Karthik Subburaj Next : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தொடர்ந்து கார்த்தி சுப்புராஜ் யாருடைய படத்தை இயக்க உள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவில் வித்தியாச வித்தியாசமான திரைக்கதையில் ரசிகர்களை கவர்ந்தவர் கார்த்திக் சுப்புராஜ்.

இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்கி இருந்த பேட்ட திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் யாரை இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருந்த நிலையில் தற்போது பதில் கிடைத்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினியை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் நடிகர் தனுஷ் நடிக்க உள்ள படத்தை தான் இயக்க உள்ளாராம்.

பேட்ட படத்திற்கு முன்பாகவே இவர்களின் கூட்டணி உறுதியாகி விட்டதாகவும் ரஜினியை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததால் இந்த படத்தை கிடப்பில் போட்டு இருந்ததாகவும் இதற்கு தனுஷும் சம்மதம் கூறி இருந்ததாகவும் கார்த்திக் சுப்புராஜ் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

மேலும் இந்த படத்தை ஆரம்பத்தில் திட்டமிட்ட படியே why not studios நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.