கார்த்திக் சுப்புராஜின் அடுத்த ஹீரோ யார் என்பது குறித்த தகவல்கள் இணையத்தில் கசிந்து வைரலாக தொடங்கியுள்ளன.
Karthik Subburaj Movie Updates : தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை இயக்கி கிடுகிடுவென முன்னணி இயக்குநராக இடம் பிடித்தவர் கார்த்திக் சுப்புராஜ்.
இறுதியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து பேட்ட திரைப்படத்தை இயக்கி இருந்தார்.
இந்த படத்திற்கு பிறகு அவர் யாரை இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே இருந்து வந்தது, தற்போது அதற்கான பதில் கிடைத்துள்ளது.
மீண்டும் பரபரப்பு.. ரஜினியை தொடர்ந்து கேப்டனை சந்தித்த ஸ்டாலின்.!
கார்த்திக் சுப்புராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தொடர்ந்து தனுஷை தான் இயக்க உள்ளாராம். இந்த படத்தின் படப்பிடிப்புகள் வெளிநாடுகளில் தொடங்க இருப்பதாகவும் கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன.
தனுஷ், கார்த்திக் சுப்புராஜ் கூட்டணி ஏற்கனவே இணைந்திருக்க வேண்டிய கூட்டணி, பேட்ட படத்தால் இவர்களின் கூட்டணி தள்ளி போனது என்பது குறிப்பிடத்தக்கது.