Karthik Subbaraj to produce Keerthy Suresh film :
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பாளராகவும் சில படங்களை தயாரித்து வருகிறார். இதில் ஒரு படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறாராம்.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் இயக்குநர்களில் முக்கியமானவர் கார்த்திக் சுப்புராஜ், பீட்சா, ஜிகர்தண்டா என கவனம் ஈர்த்த அவர் குறுகிய காலத்திலேயே ரஜினியுடன் பேட்ட படத்தில் இணைந்து அசத்தினார்.
கார்த்திக் சுப்புராஜ் எந்தவளவு ரஜினி ரசிகர் என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். ரசிகர் மட்டுமல்லாமல் ரஜினிக்கு பேட்ட மூலம் மிகப்பெரிய வெற்றி படத்தையும் கொடுத்தார்.
இயக்குனர் சார் எல்லாம் சரி தான், ஆனால்? – 100 படத்தின் விமர்சனம்.!
இதைதொடர்ந்து அடுத்ததாக இவர் தனுஷ் நடிப்பில் ஒரு படத்தை இயக்குகிறார். இது முடிந்ததும் தனுஷ் தயாரிப்பில் மீண்டும் ரஜினி நடிப்பில் ஒரு படத்தை இயக்குகிறார்.
இதுபோக தயாரிப்பாளராகவும் கார்த்திக் சுப்புராஜ் சில படங்களை தயாரித்து வருகிறார். இதில் ஒரு படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறாராம். இப்படத்தை அறிமுக இயக்குநர் ஈஸ்வர் இயக்குகிறார்.