Karthik Dial Seytha Yenn Trolls
Karthik Dial Seytha Yenn Trolls

கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படம் தற்போது மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு இறையாகியுள்ளது.

Karthik Dial Seytha Yenn Trolls : கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு மற்றும் திரிஷா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் விண்ணை தாண்டி வருவாயா.

குஷி படம் பற்றி வெளியான செம மீம்ஸ்.. எஸ்ஜே சூர்யா கொடுத்த அல்டிமேட் ரியாக்ஷன் – புகைப்படத்துடன் இதோ!

இந்த படத்தின் கதை களத்தை அடிப்படையாகக் கொண்டு அதே ஜெர்ஸ்ஸி, கார்த்திக் கதாபாத்திரங்களை வைத்து கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படத்தை இயக்கி இருந்தார் கௌதம் மேனன்.

சமீபத்தில் வெளியான இந்த குறும்படத்தில் திரிஷாவிற்கு திருமணமாகி ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் முன்னாள் காதலரான சிம்பு திரிஷாவிற்கு போன் செய்து ஐ லவ் யூ, ஐ லவ் யூ என கூறுகிறார்.

நீ எனக்கு வேண்டும் என விடாமல் அவரைத் தொந்தரவு செய்கிறார். இதனையடுத்து திரிஷா ஐ லவ் யூ என கூறியது மட்டுமல்லாமல் நீ எனக்கு மூன்றாவது குழந்தை மாதிரி என கூறி விடுகிறார்.

திரிஷா சிம்புவை குழந்தை என கூறியது தான் தற்போது நடந்து வரும் விவகாரத்திற்கு காரணம்.

சிம்பு திரிஷாவின் கையில் குழந்தையாக தவழ்வது போலவும் சேட்டைகளை செய்வது போலவும் மீம்ஸ் உருவாக்கப்பட்டு சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்பட்டு வருகின்றன.

காதலை வெளிப்படுத்திய போட்டியாளர், வெக்கப்படும் முகென் – வைரலாகும் ப்ரோமோ வீடியோ.!

வீட்டில் வெட்டியாக இருக்கும் நெட்டிசன்களுக்கு இந்த குறும்படம் தற்போது அசைபோடும் அவல் பொறியாக மாறியுள்ளது.

ஆளாளுக்கு இந்த குறும்படத்தை கலாய்த்து எடுத்து வருகின்றனர்.

https://twitter.com/theabishekkumar/status/1263813586842841088?s=19

https://twitter.com/sayhitonivi/status/1263768355745521664?s=19