karthi and rashmika
karthi and rashmika

karthi and Rashmika : தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம் என தொடர்ந்து இரண்டு வெற்றி படங்களை கொடுத்த கார்த்தியின் கேரியரில் தேவ் ஒரு சின்ன சறுக்கலை சந்தித்தது.

அதன் பின் சுதாரித்துக் கொண்ட கார்த்தி, தற்போது கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேடிப் பிடித்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜின் கைதி படத்தில் நடித்து வருகிறார்.

தன்னம்பிக்கையின் ’தல’ – அஜித் குறித்த சிறப்புத் தொகுப்பு இதோ!

இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி பெரிதளவில் பேசப்பட்டது.
இதை தொடர்ந்து ரெமோ பாக்யராஜ் கண்ணன் இயக்கத்திலும் கார்த்தி ஒரு படத்தில் நடிக்கின்றார்.

இப்படத்தில் அவரது ஜோடியாக இன்கேம் இன்கேம் புகழ் ராஷ்மிகா நடித்து வருகிறார்.

கார்த்தி தற்போது ஜீத்து ஜோசப் படத்தில் நடித்து வருகிறார் என்பதால் இப்படத்திற்கு பிரேக் விடப்பட்டுள்ளது.

மேலும் ஜூலை முதல் வாரத்தில் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.