Karoline Kamakshi
மீனா நடித்து வரும் கரோலின் காமாட்சி வெப் சீரிஸ் தொடர் ஒளிபரப்பாக தொடங்கிய சில தினங்களிலேயே ரசிகர்களிடம் இருந்து நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் அஜித், விஜய், ரஜினி என பல நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலமானவர் மீனா. இவர் தற்போது கரோலின் காமாட்சி என்ற வெப் சீரிஸ் மூலமாக திரையுலகில் அடுத்த இன்னிங்க்ஸை தொடங்கியுள்ளார்.

ஏற்கனவே இந்த வெப் சீரிஸின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச்சை பெற்றிருந்தது. மீனா ரிச்சான பெண்ணாக, தர லோக்கலாக, அய்யராத்து மாமியாக என பல வேடங்களில் மிரட்டி இருந்தார். இதனால் இந்த வெப் சீரிஸ் மீதான எதிர்பார்ப்பு அதிகமானது.

இந்நிலையில் கடந்த 5-ம் தேதி முதல் ஜீ 5-ல் ஒளிபரப்பாக தொடங்கிய இந்த வெப் சீரிஸும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மீனாவுக்கு இதுவொரு நல்ல கம்பேக்காக இருக்கும் எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.