Karnan Vs Nizhal Movie

கர்ணனுக்கு போட்டியாக நயன்தாராவின் திரைப்படம் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Karnan Vs Nizhal Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ள திரைப்படம் கர்ணன்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். படத்தின் பாடல்கள், டீஸர் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த படத்தின் ரிலீசுக்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படத்தோடு நயன்தாராவின் இன்னொரு படமும் வெளியாக இருப்பதாக தகவல் கிடைத்தது. குஞ்சாக்கோ போபன் நடிப்பில் உருவாகியுள்ள நிழல் திரைப்படமும் வெளியாக உள்ளது.

இந்த படத்தில் நடிகை நயன்தாரா ஏழு வயதுச் சிறுவனுக்கு அம்மாவாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.