Karnan Release Update

டீசருடன் கர்ணன் திரைப்படம் எப்போது ரிலீசாகும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Karnan Release Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் ஜகமே தந்திரம் திரைப்படம் வெளியாக உள்ளது.

இதனைத் தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் கர்ணன். இந்தப் படத்தின் ஷூட்டிங் டிசம்பர் மாதம் முடிவடைந்தது.

கலைப்புலி எஸ் தாணு தயாரித்த இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.

படத்தின் டீஸர் உடன் ரிலீஸ் தேதியையும் அறிவித்து படக்குழு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தத் திரைப்படம் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்துள்ளது.

மேலும் இந்தப் படத்தின் இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன் படத்தை பார்த்துவிட்டு வியப்பாகவும், கர்ணன் அனைத்தையும் கொடுப்பான். எனவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கர்ணன் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.