Karnan Teaser Update

தமிழ் படத்தின் டீசர் ரிலீஸ்க்கு படக்குழுவினர் நாள் குறித்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Karnan Movie Teaser Update : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக ஜகமே தந்திரம் மற்றும் கர்ணன் என இரண்டு திரைப்படங்கள் வெளியாக உள்ளன.

கர்ணன் திரைப்படத்தை படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், பாடல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி மிக பெரிய வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து இந்த படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் வெகுவாக இருந்து வந்தது. தற்போது கிடைத்துள்ள தகவலின்படி கர்ணன் படத்தின் டீசர் ரிலீஸ் எப்போது என்பதை படக்குழு முடிவு செய்துவிட்டதாம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெகு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கலைப்புலி எஸ் தாணு தயாரித்த இந்தப் படத்தின் டீசர் வரும் ஞாயிற்றுக் கிழமை வெளியாகும் என கூறப்படுகிறது. காரணம் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரித்த கபாலி, vip2, அசுரன் ஆகிய படங்களின் டீசர் ஞாயிற்று கிழமைகளில் தான் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.