Karnan Movie Team Treat in Dhanush Birthday
Karnan Movie Team Treat in Dhanush Birthday

தனுஷ் பிறந்த நாளில் நாங்கள் கொடுக்கும் ட்ரீட் இதுதான் என கர்ணன் படக்குழு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

Karnan Movie Team Treat in Dhanush Birthday : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் மற்றும் பரியேறும் பெருமாள் பட இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளன.

இயல்பு நிலை திரும்பி தியேட்டர்கள் திறக்கப்பட்ட உடன் இந்த படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தனுஷ் நாளை (ஜூலை 28) தன்னுடைய பிறந்தநாளை கொண்டாட உள்ளார். தனுஷின் பிறந்தநாள் விருந்தாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடித்துள்ள ஜகமே தந்திரம் படத்திலிருந்து ரகிட ரகிட என்ற சிங்கிள் ட்ராக் பாடல் வெளியாக உள்ளது.

OTT ரிலீஸ்.. ஒரே நேரத்தில் சூர்யாவை இயக்கும் இரண்டு இயக்குனர்கள், சம்பளமே இல்லாமல் நடிக்க ஒப்பந்தம் – வெளியான அதிரடி தகவல்கள்

இதனைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கும் கர்ணன் படத்தின் டைட்டில் லுக் மற்றும் மேக்கிங் ஆகியவை வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தனுஷின் பிறந்தநாளில் டபுள் டிரீட் காத்திருப்பதாக ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இவ்விரண்டு படத்திற்காக ஆவலுடன் காத்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

https://twitter.com/mari_selvaraj/status/1287378795628879872?s=19
https://twitter.com/ITZ__DGP/status/1287379618106707970?s=19
https://twitter.com/itz_dhanush8/status/1287400262441693185?s=19