Karnan Movie Status

கர்ணன் திரைப்படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்தும் அரசின் உத்தரவு மற்றும் தமிழ் ராக்கர்ஸ் காரணமாக படக்குழு நொந்து போய் உள்ளது.

Karnan Movie Status : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் கர்ணன்.

இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் விமர்சனமும் கிடைத்து வருகிறது. ஆனால் பரவிவரும் கொரோனா வைரஸ் படத்தின் வசூலுக்கு வைத்துள்ளது.

கொரானா வைரஸ் பரவலால் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க படம் வெளியான தினமே தமிழ் ராக்கர்ஸ் கர்ணன் திரைப்படத்தை எச்டி பிரிண்ட்டில் லீக் செய்துள்ளது.

இதனால் படக்குழு படத்திற்கு நல்ல விளைச்சல் கிடைக்கும் இப்படியான புயல் உருவாகி விட்டது என கொஞ்சம் வருத்தத்தில் இருந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.