எதிர்பாராத நேரத்தில் கர்ணன் படம் பற்றிய சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
Karnan Movie Statelite Rights : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் தற்போது ஜகமே தந்திரம் மற்றும் கர்ணன் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளன.
ஜகமே தந்திரம் திரைப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். கர்ணன் திரைப்படத்தை பரியேறும் பெருமாள் பட புகழ் மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார்.
ரசிகர்கள் அனைவரும் கர்ணன் படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர். மேலும் படத்தை தடை செய்ய வேண்டும் என ஏற்கனவே சில ஜாதியினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இருப்பினும் படத்தை வெளியிடுவதில் படக்குழு மும்மரமாக உள்ளது. இதன் அடுத்த கட்டமாக தற்போது இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜீ தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.