Karnan Movie Shooting Wrapped

தனுஷின் கர்ணன் திரைப்படம் பற்றிய முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

Karnan Movie Shooting Wrapped : தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான அசுரன் திரைப்படம் பெரும் வெற்றியைப் பெற்றிருந்தது.

இந்த படத்தை தொடர்ந்து தனுஷ் பரியேறும் பெருமாள் பட இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் கர்ணன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

பல நடிகர் நடிகைகள் இணைந்து நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன.

இந்த நிலையில் தற்போது படத்திற்கு தேவையான அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டு படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளனர் படக்குழுவினர்.

இதனால் வெகு விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இப்படம் பற்றிய போஸ்டர் டீசர் டிரைலர் பற்றிய அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் எனவும் எதிர்பார்க்கலாம்.

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் திரைப்படத்திற்காக தனுஷ் ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து விட்டது என்பதை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.