Karnan Movie Review

தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தில் திரை விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

Karnan Movie Review : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். மாரி செல்வராஜ் இயக்கத்தில் இவர் நடித்துள்ள கர்ணன் திரைப்படம் எப்படி உள்ளது என்பதை பார்க்கலாம் வாங்க.

படத்தின் கதைக்களம் :

கர்ணணான தனுஷ் பொடியகுளம் எனும் குக் கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். இந்த கிராமத்தில் கீழ்ஜாதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதனால் இவர்களை மட்டம் தட்டும் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

அரசிடம் இருந்து இந்த ஊருக்கு கிடைக்கவேண்டிய சலுகைகள் கீழ் ஜாதி என்பதால் தொடர்ந்து பல வருடங்களாக தட்டி கழிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஊர் வழியாகச் செல்லும் பேருந்துகள் இந்த ஊர் நிறுத்தத்தில் நிறுத்தப்படுவது இல்லை. இதனால் மக்களுக்காக தனுஷ் போராடத் தொடங்குகிறார்.

கெஞ்சி கேட்டால் வேலைக்காகாது நிமிர்ந்து கேட்க வேண்டும் என போராடுகிறார் தனுஷ். இறுதியில் என்ன நடந்தது? இவர்கள் ஜெயித்தார்களா இல்லையா? என்பதுதான் இந்த படத்தின் கதை.

படத்தை பற்றிய அலசல் :

நடிப்பு :

தனுஷ், லால் உள்ளிட்டோர் இந்த படத்தின் மிகப்பெரிய பலமாக உள்ளனர்.

யோகி பாபு, ரஜூஷா விஜயன், லட்சுமி பிரியா, கௌரி கிஷன் ஆகியோரின் நடிப்பு பேசும் வகையில் அமைந்துள்ளது.

இசை :

சந்தோஷ் நாராயணன் இசை படத்திற்கு உயிர் கொடுத்துள்ளது. கர்ணனை கண்டா வரச்சொல்லுங்க என்ற பாடல் பூரிக்க வைக்கிறது.

இயக்கம் :

மாதி சொல்வது முற்றிலும் மாறுபட்ட கதைக் களத்தை கையில் எடுத்து அதனை திறம்பட கொடுத்துள்ளார்.

தம்ப்ஸ் அப் :

  1. படத்தின் கதைக்களம்
  2. பாடல்கள்
  3. ஒளிப்பதிவு
  4. இசை

தம்ப்ஸ் டவுன் :

  1. படத்தின் நீளம் ஆனாலும் அது பெரிய குறை இல்லை
REVIEW OVERVIEW
கர்ணன் விமர்சனம்
karnan-movie-reviewமொத்தத்தில் கர்ணன் தனுஷ் திரைப்பயணத்தில் ஒரு சிறந்த படைப்பு.