நடிகர் தனுஷின் கர்ணன் திரைப்படத்தை OTT நிறுவனம் பெரிய தொகைக்கு கைப்பற்றியுள்ளது.
Karnan Movie Release Update : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக கர்ணன், ஜகமே தந்திரம் என இரண்டு திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் நேரடியாக நெட்ப்ளிக்ஸ் தளத்தின் வழியாக வெளியாக உள்ளது.
மேலும் பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரிசல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கர்ணன் திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. திரையரங்குகளில் வெளியாவதைத் தொடர்ந்து இப்படம் OTT-யிலும் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் தற்போது அமேசான் ப்ரைம் நிறுவனம் இந்தத் திரைப்படத்தை பெரிய விலைக்கு கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகியுள்ளது. கர்ணன் திரைப்படத்தின் டீசர் நாளை மாலை 7.01-க்கு ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.