Karnan Clash With Doctor Movie

கர்ணன் படம் ரிலீசாக உள்ள தேதியில் சிவகார்த்திகேயனின் டாக்டர் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Karnan Clash With Doctor Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் ஜகமே தந்திரம் OTT வழியாக வெளியாக உள்ளது.

இதனை அடுத்து இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் தனுஷ்.

இந்தப் படம் ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்து இருந்தது.

இதேபோல் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் டாக்டர்.

இந்த திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் ஒரே நாளில் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயனின் படம் ரிலீஸ் ஆவதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.

இந்த இரண்டு படங்களில் ஜெயிக்கப்போவது எது என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.