Kappaan

Kappaan  Movie : அஜித் பாணியில் காப்பான் படக்குழுவிற்கு நடிகர் சூர்யா சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா தற்போது கே.வி ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாயிஷா நடிக்க ஆர்யா, மோகன் லால், சமுத்திரக்கனி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். ஹரிஷ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார்.

தற்போது சூர்யா படக்குழுவினருக்கு பிரியாணி சமைத்து பரிமாறியுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பொதுவாகவே அஜித் தான் தன்னுடைய படக்குழுவிற்க்கு தன்னுடைய கையால் பிரியாணி சமைத்து கொடுப்பார். தற்போது அதே பாணியை சூரியாவும் பின்பற்றியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.