Kanni Maadam Producer Thanking Statement
Kanni Maadam Producer Thanking Statement

டொராண்டோ தமிழ் ஃபிலிம்ஸ் பெஸ்டிவல் விழாவில் சிறந்த படமாக கன்னி மாடம் திரைப்படம் தேர்வாகியுள்ள நிலையில் அப்படத்தின் தயாரிப்பாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Kanni Maadam Producer Thanking Statement : தமிழ் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் பிரபல நடிகராக வலம் வருபவர் போஸ் வெங்கட். இவர் இயக்கி நடித்திருந்த திரைப்படம் கன்னி மாடம்.

சமூக சிந்தனையுள்ள கருத்தை மையமாகக் கொண்டு உருவாகி இருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. இந்த படத்தை ரூபி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பாக ஹசீர் தயாரித்திருந்தார்.

சமீபத்தில் கனடாவில் நடைபெற்ற டொரான்டோ தமிழ் பிலிம் பெஸ்டிவல் திருவிழாவில் இப்படம் பார்வையாளர்கள் ஓட்டுகளின் அடிப்படையில் சிறந்த படமாக தேர்வானது.

டொராண்டோ தமிழ் இன்டர்நேஷனல் பிலிம் ஃபெஸ்டிவல் விழாவில் நாமினேஷன் லிஸ்டில் 3 தமிழ் திரைப்படங்கள் – என்னென்ன படங்கள் தெரியுமா?

இந்த நிலையில் தற்போது இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் ஹசீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தரமான படங்களை தயாரிக்கும் நோக்கத்தில் எனது தயாரிப்பு நிறுவனமான ரூபி பிலிம்ஸ் நிறுவனம் வண்டி, கன்னி மாடம், மங்கி டாங்கி ஆகிய படங்களைத் தயாரித்துள்ளேன்.

இந்த மூன்று படங்களில் கன்னி மாடம் திரைப்படம் டொராண்டோ தமிழ் பிலிம் பெஸ்டிவல் திருவிழாவில் சிறந்த படமாக தேர்வானதில் மிக்க மகிழ்ச்சி

இந்த விருது இன்னும் இது போன்ற நல்ல படங்களை தயாரிக்க வேண்டும் என்ற நம்பிக்கையையும் உத்வேகத்தையும் கொடுத்துள்ளது. இந்த வெற்றிக்குக் காரணமாக இருந்த படக்குழுவினருக்கும், பத்திரிக்கையாளர்கள் நண்பர்களுக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும், ரசிக பெருமக்களுக்கும், டொராண்டோ தமிழ் ஃபிலிம்ஸ் பெஸ்டிவல் தேர்வுக் குழுவிற்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.