Kanne Kalaimaane Review
Kanne Kalaimaane Review

Kanne Kalaimaane Review – உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி, தமன்னா பூ ராம், வடிவுக்கரசி, வசுந்தரா மற்றும் பலர் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் கண்ணே கலைமானே.

கதைக்களம் :

நாயகனான உதயநிதி விவசாயம் சார்ந்த பட்டப்படிப்பை முடித்து விட்டு தன்னுடைய கிராமத்தில் மண்புழு உரத்தை பயன்படுத்தி இயற்கை விவசாயம் செய்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் தன்னுடைய ஊரில் வறுமையால் கஷ்டப்படும் மக்களுக்கும் தன்னுடைய பெயரில் கூட்டுறவு வங்கியில் லோன் வாங்கி உதவி செய்து வருகிறார்.

இது தெரியாமல் அந்த வங்கிக்கு புதிய மேனேஜராக வரும் தமன்னா லோன் வாங்கிட்டு திருப்பி கட்டாத உதயநிதியிடம் பணத்தை கட்டவில்லை என்றால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பேன் என எச்சரிக்கிறார்.

பின்னர் உதயநிதியின் நல்ல மனதை புரிந்து கொண்டு இருவரும் காதல் வயப்படுகின்றனர். ஆனால் உதயநிதியின் வீட்டார் இவர்களின் காதலை ஏற்க மறுக்கின்றனர்.

அதன் பின்னர் ஒருவழியாக தன்னுடைய குடும்பத்தாரின் சம்மதத்துடன் தமன்னாவை மணந்து கொள்கிறார் உதயநிதி. ஆனாலும் தமன்னாவை பிடிக்காதவர் போலவே வெறுப்பை காட்டி வருகிறார் உதயநிதியின் பாட்டியான வடிவுக்கரசி.

திடீரென தமன்னா கண் பார்வை இழந்து விடுகிறார். அதன் பின்னர் இவர்களின் வாழ்க்கையில் என்னென்ன நடக்கின்றன என்பது தான் இப்படத்தின் மீதி கதை.

உதயநிதி :

வழக்கமாக இந்த படத்திலும் உதயநிதி தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். படத்தில் ஆங்காகே பேசும் அரசியல் வசனங்கள் தற்போதைய அரசியலை நினைவிற்கு கொண்டு வருகிறது.

தமன்னா :

தமன்னா இந்த படத்தில் சிறிதும் கிளாமர் இல்லமால் படம் முழுவதும் வரும் வகையில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடைய நடிப்பு பாராட்டும் விதத்தில் உள்ளது.

வடிவுக்கரசி :

வடிவுக்கரசியின் எதார்த்தமான நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. உதயநிதியின் பாட்டியாக சிறப்பாக நடித்துள்ளார்.

மற்ற நடிகர் நடிகைகள் :

மற்ற நடிகர் நடிகைகளும் இப்படத்திற்கு என்ன தேவையோ அதை அழகாக வெளிப்படுத்தியுள்ளனர்.

தொழில் நுட்பம் :

இசை :

யுவன் ஷங்கர் ராஜாவின் இசை படத்தின் மற்றொரு பலம். பாடல்களும் ரசிக்கும் படியாக அமைந்துள்ளன. குறிப்பாக படத்தின் அறிமுக பாடல் அற்புதம்.

ஒளிப்பதிவு :

ஜலேந்தர் வாசன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். பச்சை பசேலென எழில் கொஞ்சும் கிராமத்து அழகை சிறப்பாக படமாக்கியுள்ளார்.

எடிட்டர் :

மு. காசி விஸ்வநாதன் இந்த படத்தின் எடிட்டிங் பணிகளை கவனித்துள்ளார். சில இடங்களில் தேவையில்லாத காட்சிகளுக்கு இன்னும் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம். மற்றபடி அவருடைய பணியையும் சிறப்பாக செய்து கொடுத்துள்ளார்.

ஸ்டண்ட் :

விஜய் ஜாகுவார் இப்படத்திற்கான ஸ்டண்ட் பணிகளை கவனித்துள்ளார். படத்தில் ஒரே ஒரு சண்டை காட்சி தான் இடம் பெறும். அதையும் உதயநிதிக்கு ஏற்றார் போல் அமைத்துள்ளார்.

இயக்கம் :

சீனு ராமசாமி இப்படத்தின் லேசாக அரசியல் கலந்த படமாக வித்தியாசமான திரைக்கதையுடன் கொண்டு சென்றுள்ளார். ஆனால் கொஞ்சம் விறுவிறுப்பையும் கூட்டி இருக்கலாமே என எண்ண தோன்றுகிறது.

தம்ப்ஸ் அப் :

1. உதயநிதி, தமன்னா, வடிவுக்கரசி நடிப்பு
2. இசை

தம்ப்ஸ் டவுன் :

1. விறுவிறுப்பை கொஞ்சம் கூட்டி இருக்கலாம்
2. காமெடிக்கு இன்னும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம்.

YouTube video

REVIEW OVERVIEW
கண்ணே கலைமானே - திரை விமர்சனம்!
kanne-kalaimaane-reviewமொத்தத்தில் எந்தவொரு காட்சியிலும் முகம் சுழிக்காமல் குடும்பத்துடன் பார்த்து ரசிக்க கூடிய ஒரு படம் தான் கண்ணே கலைமானே.