Kanja Karuppu Interview About Thala Ajith

இதெல்லாம் இப்ப மறக்கணும்னு நினைத்தாலும் முடியவே முடியாது என பிக்பாஸ் பிரபலம் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

Kanja Karuppu Interview About Thala Ajith : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவருக்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. பல திரையுலக பிரபலங்கள் கூட அஜித்தின் ரசிகர்கள்தான் இருந்து வருகின்றனர்.

தல அஜித் செய்யும் உதவிகள் பற்றி பிரபலங்கள் அளிக்கும் பேட்டிகளில் தான் தெரிய வரும்‌. அந்த வகையில் அஜித்துடன் ஒரே ஒரு படத்தில் இணைந்து நடித்த கஞ்சா கருப்பு அவருடனான அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

அஜித் வரும் போது எழுந்து நின்றால் கூட நானும் மனுஷன் தானப்பா உட்காருங்க என கூறுவார். எனக்காக கேரவனில் சமைத்து கொடுத்துள்ளார். அஜித் பக்கா ஜென்டில்மேன். அவர் எனக்காக செய்தது எல்லாம் இன்று மறக்க வேண்டும் என்று நினைத்தாலும் மறக்க முடியாது என தெரிவித்துள்ளார்.