Kanaa Movie Review

Kanaa Review :

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜ் காமராஜா இயக்கத்தில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், சிவகார்த்திகேயன், தர்ஷன், இளவரசன் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ள படம் கனா. இப்படம் வரும் டிசம்பர் 21-ம் தேதி திரைக்கு வர உள்ளது.

படத்தில் சத்யராஜ் விவசாயியாகவும் கிரிக்கெட் ரசிகராகவும் நடித்துள்ளார். இவருக்கு மகளாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் படத்தின் கெஸ்ட் ரோல் என்பதை விட முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது சரியானது.

கதைக்களம் :

கிராமத்தில் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்தி வருபவர் சத்யராஜ். இவர் கிரிக்கெட் விளையாட்டின் தீவிர ரசிகர். இவருடைய மகள் ஐஸ்வர்யா ராஜேஷ்.

ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய அப்பா கிரிக்கெட் மீது வைத்துள்ள ஆர்வத்தையும் காதலையும் பார்த்து தானும் கிரிக்கெட் மீது ஆசையை வளர்த்து கொள்கிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷின் கிரிக்கெட் ஆசை ஒரு புறம் இருக்க வறட்சியால் கிராமத்தில் விவசாயம் முற்றிலுமாக பாதிக்கப்படுகிறது.

இதனால் சத்யராஜ் மனமுடைந்து போகிறார். இவர்களின் இருவரின் வாழ்க்கையில் அடுத்தடுத்து என்ன நடந்தது? ஐஸ்வர்யா ராஜேஷ் இந்தியா அணிக்காக விளையாடி ஜெயித்தாரா? கனவு நிறைவேறியதா? என்பது தான் கனாவின் கதைக்களம்.

சத்யராஜ் :

விவசாயியாக மகளின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கும் தகப்பனாக நடித்துள்ள சத்யராஜின் நடிப்பு அபாரம். இப்படத்தின் ஆணி வேறாராகவே சத்யராஜ் நடிப்பு அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது.

சிவகார்த்திகேயன் :

சிவகார்த்திகேயன் இப்படத்தை தயாரித்தது மட்டுமில்லாமல் முக்கிய வேடத்தில் கிரிக்கெட் கோச்சராக நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் நடிப்பு, கெட்டப் அனைத்தும் கச்சிதமாக பொருந்தியுள்ளது.

ஐஸ்வர்யா ராஜேஷ் :

நாயகியை மையமாக கொண்ட கதையை தேர்வு செய்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படத்திற்காக மிகவும் கடினமாக உழைத்துள்ளார்.

அவரின் உழைப்பு படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்த உறுதுணையாக அமைந்துள்ளது. மீண்டும் தன்னை ஒரு திறமையான நடிகை என நிரூபணம் செய்துள்ளார்.

தர்ஷன் :

இப்படத்தின் மூலம் தர்ஷன் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். முதல் படம் தான் என்றாலும் அசத்தலான நடிப்பால் அனைவரையும் கவர்ந்துள்ளார். கடைசி வரை ஐஸ்வர்யா ராஜேஷை ஒருதலை பட்சமாகவே காதலித்து வருகிறார்.

இதர நடிகர், நடிகைகள் :

இப்படத்தில் நடித்துள்ள மற்ற நடிகர் நடிகைகள் என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். யாருடைய நடிப்பிலும் பெரியதாக குறை என கூறும் அளவிற்கு இல்லை.

சத்யராஜின் மனைவியாக ஐஸ்வர்யா ராஜேஷின் அம்மாவாக நடித்துள்ள ரமா அவர்கள் எதார்த்தமான நடிப்பை பதிவு செய்துள்ளார்.

தொழில்நுட்பம்

இசை :

Dhibu Ninan Thomas என்பவர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கிராமத்து கதை என்பதால் இசை தான் படத்தின் உயிர்.

இதனை நன்கு புரிந்து கொண்டு இசையமைப்பாளர் படத்திற்கு உயிர் கொடுத்துள்ளார் என்றே கூறலாம். படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கும் வகையில் அமைந்துள்ளது.

ஒளிப்பதிவு :

இப்படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் என்பவர் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிராமம், நகரம் என இரண்டு விதமான கதைகளிலும் சிறப்பான ஒளிப்பதிவை கொடுத்துள்ளார்.

எடிட்டர் :

ஏ.எல் ரூபன் இப்படத்திற்கு எடிட்டிங் செய்துள்ளார். பொதுவாகவே ரூபனின் எடிட்டிங் அனைத்து படங்களிலும் தரமானதாக இருக்கும். அந்த வகையில் இந்த படத்தையும் சிறப்பான முறையில் எடிட் செய்துள்ளார்.

இயக்குனர் :

பாடல் ஆசிரியரும் பாடகருமான அருண்ராஜ் காமராஜா கனா படத்தின் மூலம் இயக்குநரான அறிமுகமாகியுள்ளார்.

அறிமுக படத்திலேயே தன்னை திறமையான இயக்குனராக நிரூபித்துள்ளார். படத்தின் கதை, திரைக்கதை, வசனம் என அனைத்தும் பாராட்டும் வகையில் அமைத்துள்ளார்.

தம்ப்ஸ் அப் :

1. படத்தின் கதை, சமூக கருத்து
2. ஒட்டுமொத்த நடிகர்களின் நடிப்பு
3. பாடல்கள், இசை
4. பெண்களின் கிரிக்கெட் பற்றி பேசி இருப்பது
5. கடைசி 20 நிமிட காட்சிகள்

தம்ப்ஸ் டவுன் :

படத்தின் குறை என எதையும் கூறும் அளவிற்கு இல்லை.

REVIEW OVERVIEW
கனா விமர்சனம்.!
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
kanaa-reviewமொத்தத்தில் கனா குடும்பத்துடன் பார்த்து கொண்டாட வேண்டிய படம். பெண்களின் உணர்வுகளுக்கும் விவசாயத்திற்கும் மதிப்பளிக்க வேண்டும் எனபதை உணர்த்தும் படம்.