KamalHaasan Ready to Vikram Movie

தேர்தல் முடிந்த பின் கமல் எடுத்த அதிரடி முடிவு ரசிகர்களை சிலாகிக்க வைத்துள்ளது.

KamalHaasan Ready to Vikram Movie : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்ததை தொடர்ந்து தமிழக அரசியலிலும் தடம் பதித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை மூலமாக இரண்டு முறை தேர்தலை சந்தித்துள்ளார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு உள்ளார் உலக நாயகன் கமல்ஹாசன்.

தேர்தல் முடிந்ததை தொடர்ந்து உலக நாயகன் கமல்ஹாசன் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள விக்ரம் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தற்போது அவர் இந்த படத்தில் நடிப்பதற்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க தயாராகி வருவதாக வெளியான தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.