darshan

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய தர்ஷனை கமல்ஹாசன் அழைத்துப் பேசியதாக செய்தி வெளியாகியுள்ளது.

kamal haasan met darshan and chance in indian2 – பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து யாரும் எதிர்பார்க்காத வகையில் நேற்று தர்ஷன் வெளியேற்றப்பட்டார். இது பிக்பாஸ் வீட்டிலிருந்தவர்களுக்கு மட்டுமில்லாமல், இதுவரை இந்த நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டு வந்தவர்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது தனக்கும் அதிர்ச்சியாக இருப்பதாக மேடையில் தர்ஷன் முன்னிலையிலேயே கமல்ஹாசனும் தெரிவித்திருந்தார்.

BB3 12th Eviction Person : Shocking Information..! | Sherin | Cheran | Kavin | Losliya | Tharshan | Kollywood Cinema News | Tamil Cinema News

இந்நிலையில், தர்ஷனை கமல்ஹாசன் சமீபத்தில் நேரில் அழைத்து பேசியதாக செய்திகள் கசிந்துள்ளது. இந்தியன் 2-வில் ஒரு வேடத்தில் நடிக்க தர்ஷனுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

பிக் பாஸை விட்டு வெளியேறியதும் தர்ஷனுக்கு கிடைத்த முதல் பட வாய்ப்பு – இதோ அதிரடி அறிவிப்பு!

இந்தியன் 2-வில் ஏற்கனவே சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத்சிங், பிரியா பவானி சங்கர், விவேக் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளனர். இதில், தர்ஷனும் நடிக்க வாய்ப்பிருப்பதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.