KamalHaasan 232 Title Teaser

கமல்ஹாசன் 232 படத்தில் டைட்டில் டீசர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

KamalHaasan 232 Title Teaser : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். மாபெரும் நடிகரான இவர் தற்போது மக்கள் நீதி மையம் என்ற கட்சியைத் தொடங்கி அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2. திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது கமல்ஹாசனின் கடைசி படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்ததாக அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள கமல்ஹாசன் 232 என்ற பெயரிடாத படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது.

தற்போது இந்த படத்தின் டைட்டில் டீசர் வரும் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.

இதனால் உலக நாயகன் கமல்ஹாசன் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.