Kamal in Vikram Movie Heroine Update

அவங்களுடன் தான் இன்னும் நடிக்கல அவங்கள ஓகே பண்ணிடுங்க என லோகேஷ் கனகராஜ்க்கு கமல் ஆர்டர் போட்டுள்ளார்.

Kamal in Vikram Movie Heroine Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவர் தற்போது மக்கள் நீதி மையம் என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கிய தீவிர அரசியலில் ஈடுபட தொடங்கியுள்ளார். வரும் சட்டமன்ற தேர்தலில் சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளார்.

மேலும் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வரும் கமல், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள விக்ரம் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகளை தேர்தலுக்கு முன்பே முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் அது நடக்கவில்லை.

தேர்தல் முடிந்த பிறகுதான் படப்பிடிப்புகள் தொடங்க உள்ளன. அதுவரை நடிகர் நடிகைகளின் தேர்வுகளை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இதுவரை கமலுடன் இணைந்து நடிக்காத நடிகர் நடிகைகளை ஒப்பந்தம் செய்ய லோகேஷ் கனகராஜ் ஆர்வம் காட்டி வருகிறார்.

மேலும் கமல் இதுவரை நயன்தாராவுடன் இணைந்து நடிக்கவில்லை என்பதால் அவரை கமிட் செய்யுமாறு லோகேஷ்க்கு ஆர்டர் போட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் மொத்தம் இரண்டு கதாநாயகிகள், அதில் ஒருவர் நயன்தாராவாக இருக்கலாம் என தகவல்கள் கிடைத்துள்ளன.