Kamal Character in Vikram Movie

15 ஆண்டுகளுக்குப் பிறகு விக்ரம் படத்தில் கமல் மீண்டும் மாஸான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது‌.

Kamal Character in Vikram Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவரது நடிப்பில் இந்தியன்2 திரைப்படம் உருவாகி வருகிறது. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடர்ந்து தள்ளிப்போய் வருகிறது.

இதற்கிடையில் உலகநாயகன் கமலஹாசன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தன்னுடைய சொந்த தயாரிப்பில் உருவாக உள்ள விக்ரம் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்ததைத் தொடர்ந்து இந்த படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.

தற்போது இந்த படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் கதாபாத்திரம் என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது. அதாவது இப்படத்தில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இதற்கு முன்னதாக 15 வருடங்களுக்கு முன்பு வெளியான வேட்டையாடு விளையாடு என்ற படத்தில் கமல் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.