Kalidas Premiere Show Review
திரையுலக பிரபலங்கள் காளிதாஸ் படம் பார்த்து அவர்களின் விமர்சனங்களை பதிவு செய்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் பரத். சமீப காலமாக சறுக்கத்தில் இருந்த அவருக்கு வெற்றி கொடுக்கும் படமாக அமைய உள்ளது காளிதாஸ்.

வரும் டிசம்பர் 13-ம் தேதி ரிலீசாக உள்ள இந்த படத்தின் பிரீமியர் ஷோ சில தினங்களுக்கு முன்பு நடந்தது. சாந்தனு, சினேகன், நட்டி நட்ராஜ் மற்றும் பல திரையுல பிரபலங்களும் இயக்குனர்களும் கலந்து கொண்டு படம் பார்த்தனர்.

படம் பார்த்த பிரபலங்கள் அனைவருமே படம் சிறப்பாக வந்திருப்பதாக அவர்களது விமர்சனங்களை பதிவு செய்துள்ளனர்.

குறிப்பாக சாந்தனு ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் ஒரு சைக்கலாஜிக்கல் த்ரில்லர்னு சொல்லலாம், விஷால் சந்திரசேரின் ம்யூசிக் சூப்பர். பரத், ஆதவ் கண்ணதாசன் என படத்துல நடிச்சிருக்க அனைவருமே வேற லெவலில் பர்பார்ம் பண்ணி இருக்காங்க என கூறியுள்ளார்.

நட்டி நடராஜ் கூறியதாவது, மிகவும் வித்யாசமான முயற்சி, ஒளிப்பதிவு சூப்பர், இசை மிக நுணுக்கமாக பண்ணி இருக்காங்க. நிச்சயம் பாராட்ட வேண்டிய ஒரு படம் என கூறியுள்ளார்.

கவிஞர் சினேகன் எதிர்பார்க்காத கிளைமேக்ஸ், யாரு அக்கியூஸ்ட் என்றே கண்டு பிடிக்க முடியல, சூப்பரான திரைக்கதையோட படம் வந்திருக்கு என குறிப்பிட்டுள்ளார்.

இந்த படத்தில் நடித்துள்ள பரத், ஆதவ் ஆகியோர் படத்தை தியேட்டரில் பார்த்து ஆதரவு தருமாறு கேட்டு கொண்டனர்.

இதோ அந்த வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.