Kalavani 2 Review
எ. சற்குணம் இயக்கம் மற்றும் தயாரிப்பில் விமல், ஓவியா, பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், ஆர்.ஜே விக்னேஷ், கஞ்சா கருப்பு மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் களவாணி 2.

Kalavani 2 Review : 

படத்தின் கதைக்களம் :

விமல் வழக்கம் போல் ஊதாரி தனமாக ஊரை சுற்றி கொண்டு சிறு சிறு களவாணி வேலைகளை செய்து கொண்டு வருகிறார்.

ஒரு ஆட்டை திருடும் போது ஓவியாவிடம் சிக்கி கொள்கிறார், அதன் பின்னர் இவர்களுக்கு இடையே எதிர்பார்த்த சந்திப்புகள் நிகழ்கின்றன. இறுதியில் இந்த சந்திப்பு காதலாகவும் மாறுகிறது.

பஞ்சாயத்து தேர்தலுக்கான அறிவிப்பு வருகிறது. இவர்களது ஊரில் விமலின் மாமாவான பப்ளிக் ஸ்டார் துரை ஸ்டாரும் ஓவியாவின் அப்பாவும் போட்டியிடுகின்றனர்.

இவர்களிடம் இருந்து பணத்தை கறக்க விமலும் கஞ்சா கருப்பும் திட்டம் போட்டு தேர்தலில் போட்டியிடுகின்றனர். அதன் பின்னர் தன்னுடைய காதலுக்காக விமல் தேர்தலில் ஜெயித்தாக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

அதன் பின்னர் விமல் என்னவெல்லாம் களவாணி தனம் செய்கிறார்? ஜெயித்தாரா? இல்லையா? என்பது தான் மீதி கதை.

படத்தை பற்றிய அலசல் :

நடிகர் நடிகைகளின் நடிப்பு :

விமல், ஓவியாவின் பொருத்தம் முதல் பாகத்தை போலவே இந்த படத்திலும் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியுள்ளது.

முதல் பாகத்தில் பள்ளி பெண்ணாக அசத்திய ஓவியா இதில் இன்னும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

விமலுக்கு மாமாவாக நடித்துள்ள பப்ளிக் ஸ்டார் தப்பாட்டம் படத்தில் நாயகனாக நடித்திருந்தார். நாயகனாக மட்டுமில்லாமல் வில்லத்தனமான வேடங்களிலும் வெளிக்காட்ட முடியும் என்பதை இப்படத்தின் மூலமாக நிரூபித்துள்ளார்.

எமோஷன், செண்டிமெண்ட், டைலாக் என இப்படத்தில் நிஜ அரசியல்வாதியாகவே வாழ்ந்துள்ளார் என்று சொல்லலாம்.

இவர்களை போலவே ஆர். ஜே விக்னேஷ், கஞ்சா கருப்பு ஆகியோர்களும் அவர்களின் நடிப்பை திறம்பட வெளிப்படுத்தியுள்ளனர்.

தொழில்நுட்பம் :

ஒளிப்பதிவு :

வேல்ராஜின் ஒளிப்பதிவு நம்மை ஒரு கிராமத்து மனநிலைக்கு மாற்றும் அளவிற்கு அழகாக படம் பிடித்து காட்டியுள்ளார்.

இசை :

நட்ராஜ் சங்கரனின் இசையும் பிரமாதமாக அமைந்துள்ளது. ஓட்டரம் பண்னாதடி உன்கூட நானும் வரேன் என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இயக்கம் :

இயக்குனர் சற்குணம் இந்த படத்தை இயக்கியது மட்டுமில்லாமல் தயாரித்தும் உள்ளார். முதல் பாகத்திற்கும் இந்த பாகத்திற்கும் எவ்வித சம்மதமும் இல்லாமல் தனி ட்ராக்காக இந்த படத்தை கொண்டு சென்றுள்ளார். அதில் வெற்றியும் கண்டுள்ளார்.

தம்ப்ஸ் அப் :

1. விமல், பப்ளிக் ஸ்டார் துரை சுதாகரின் நடிப்பு
2. எதார்த்தமான கதைக்களம்
3. காமெடி கலந்த கலாட்டாக்கள்
4. பொதுவாகவே பஞ்சாயத்து தேர்தல்களில் நடப்பதை அப்படியே அழகாக காட்டி இருப்பது.
5. ஒவ்வொரு சீனையும் சரியாக முடித்துள்ளனர்.

தம்ப்ஸ் டவுன் :

1. வழக்கமான லாஜிக்கள் தவறுகளை தவிர பெரிய குறை என எதுவும் சொல்வதிற்கில்லை.

மொத்தத்தில் களவாணி 2 குடும்பத்துடன் சிரித்து மகிழ ஏற்ற படம்.

REVIEW OVERVIEW
களவாணி 2 விமர்சனம்.!
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
kalavani-2-reviewமொத்தத்தில் களவாணி 2 குடும்பத்துடன் சிரித்து மகிழ ஏற்ற படம்.