Kalaiyarasan acts in Laabam :
கலையரசனும் லாபம் படத்தில் முக்கியமான ஒரு ரோலில் நடித்து வருவது தெரியவந்துள்ளது. இவர் கடைசியாக ஐரா படத்தில் நயன்தாராவின் காதலராக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உலக நாயகன் கமலின் மூத்த வாரிசு என்ற மிகப்பெரிய புகழ் இருப்பினும், தனக்கான பாதையை தனி ஆளாக அமைத்துக் கொண்டவர்தான் ஸ்ருதி ஹாசன்.
சிவகார்த்திகேயனின் அடுத்த பிளான் இதுதான் – வெளிவந்த மிரட்டல் தகவல்!
கதாநாயகி, பின்ணனி பாடகி, இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் தமிழ், தெலுங்கு, இந்தி என பலமொழிகளில் கலக்கிக்கொண்டு இருப்பவர் ஸ்ருதி ஹாசன்.
இவர் இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தமிழில் விஜய் சேதுபதி ஜோடியாக லாபம் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் ராஜபாளையத்தில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அண்மையில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்திருப்பதாக படக்குழுவால் புகைப்படத்துடன் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புகைப்படத்தின் மூலம் நடிகர் கலையரசனும் இப்படத்தில் முக்கியமான ஒரு ரோலில் நடித்து வருவது தெரியவந்துள்ளது. இவர் கடைசியாக ஐரா படத்தில் நயன்தாராவின் காதலராக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன் ஜோடி முதல்முறையாக இப்படத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.