Kalaipuli S Thanu Request to PM Narendra Modi

மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் திரைப்படங்கள் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில் தயாரிப்பாளர் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

Kalaipuli S Thanu Request to PM Narendra Modi : கொரானா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது தவறுகளின் காரணமாக சில வாரங்களாக திறக்கப்பட்டுள்ளது.

மேலும் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க மட்டுமே அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

வரும் பொங்கலில் தளபதி விஜய்யின் மாஸ்டர் சிம்புவின் ஈஸ்வரன் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாவதால் 100% இருக்கைக்கு அனுமதி கேட்டு சிம்பு மற்றும் விஜய் ஆகியோர் முதல்வருக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.

இவர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் பழனிசாமி 100% இருக்கைகளுக்கு அனுமதி வழங்கினார். ஆனால் மத்திய அரசு 50 சதவீதத்திற்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும். தமிழக அரசின் உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில் இந்திய திரையுலக கட்டமைப்பின் தலைவராக பதவியேற்றுள்ள தமிழ் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அவர்கள் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில் இந்தியா முழுவதும் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்திருப்பது 100 சதவீதமாக உயர்த்தி உத்தரவு பிறப்பிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்களின் கோரிக்கையை இந்திய அரசு ஏற்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.