Kajal Pasupathi Weightloss Secrets

எப்படி உடல் எடையை குறைத்து ஒல்லியானீங்க என ரசிகர் கேட்க அதற்கு பதிலளித்துள்ளார் காஜல் பசுபதி.

Kajal Pasupathi Weightloss Secrets : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் காஜல் பசுபதி. படங்களில் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். மேலும் இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் கூட பங்கேற்றார்.

டான்ஸ் மாஸ்டர் சாண்டியுடன் லிவிங் டுகெதர் லைஃப்பில் இருந்து வந்தார். பின்னர் சாண்டி மாஸ்டர் இவரை பிரிந்து வேறு ஒரு திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

இதுவரை குண்டாக இருந்து வந்த காஜல் பசுபதி தற்போது உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

புகைப்படத்தை பார்த்த ரசிகர் எப்படி இவ்வளவு ஒல்லியானீங்க? என்ன சீக்ரெட் எனக்கேட்க ஒண்ணுமே இல்லை வீட்ல சண்டை, சரியா சாப்பிடல என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.